விஜய் தலைமையிலான தவெக கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தனியார் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "அரசியலில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பானது. அதிகாரத்தை பெற விரும்புவது அரசியல் கட்சிகளின் அடிப்படை நோக்கம்" என கூறியுள்ளார்.