கோயில்களில் கேமரா இல்லாத செல்போன்களை கொண்டு செல்ல தடை இல்லை என அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.