தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். மேலும், இதுவரை வழங்கப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களில் 50% திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், SIR படிவம் பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 4 அன்று முடிவாய்க்கும் நிலையில், காலஅவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.