மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின், "இது மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்; அப்பட்டமான குதிரை பேரத்தால் நடக்கிறது. பெரும்பான்மை இல்லாத தவெக ஆட்சி, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி பலத்தைக் கூட்டப் பார்க்கிறது" எனச் சாடினார். மேலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப் பொருள் புழக்கம், மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வைக் குறிப்பிட்டு, "இது தூய சக்தி ஆட்சி அல்ல, துயர சக்தி ஆட்சி" என்று ஆளுங்கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தார்.