“வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் 3வது இடத்துக்கு அதிமுக தள்ளப்படும்" என தவெகவில் இணைந்த பின் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் விமர்சித்துள்ளார். மேலும், “சமூகநீதியை அதிமுகவும், திமுகவும் காக்கவில்லை அவர்கள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். எனவே தற்போது தவெகவில் இணைந்துள்ளேன். விஜய் அண்ணனுக்கு ஆதரவாக எப்போதும் இருப்பேன்” என்றார். முன்னதாக, முன்னாள் சபாநாயகரும், அதிமுக எம்.எல்.ஏ.வுமான தனபாலின் மகன் லோகேஷ், தவெகவில் இணைந்தார்.