2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் பிரச்சார பாடல் இன்று (பிப்.11) வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலின் போது "ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறாரு" என்ற பாடல் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த முறை "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற புதிய முழக்கத்துடன் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை மையமாக வைத்து இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளன.