தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7,000க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் போதிய அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளதாக தமிழ்நாடு பெட்ரோலியம் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பீதி கொள்முதல் செய்ய வேண்டாம் என்றும், அனைத்து பெட்ரோல் பங்குகளும் 24 மணி நேரமும் தடையின்றி சேவை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.