தவெக உடன் பல கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர். இந்நிலையில், “கூட்டணி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைப் பிற கட்சிகளுடன் தொடர்புபடுத்தி வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை” என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், “பல்வேறு கட்சிகள் தங்களின் கூட்டணிப் பேரங்களை உயர்த்திக் கொள்ளவும், அரசியல் உள்நோக்கத்துடனும் பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைத் தன்மையற்றவை” என தெரிவித்துள்ளார்.