திமுகவினர் விமர்சிப்பதில் நியாயம் உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவை எதிர்க்கும் தவெகவுடன் விசிக நிற்பதை அக்கட்சித் தொண்டர்கள் ஏற்பது கடினம் என்பதால், விமர்சனங்கள் வரத்தான் செய்யும் எனக் குறிப்பிட்ட அவர், விசிகவின் நேர்மை குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என்றார். எனவே, தொண்டர்கள் இப்பிரச்சினையை ஊதிப் பெரிதாக்காமல் கடந்து செல்ல வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.