இருமொழிக் கொள்கையில் சமரசம் செய்ய கூடாது: செல்வப்பெருந்தகை கண்டனம்

1பார்த்தது
இருமொழிக் கொள்கையில் சமரசம் செய்ய கூடாது: செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை பலகையில் ஹிந்தி மொழியில் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதற்கு தமிழக Ex.காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது எந்த விதிமுறையின் அடிப்படையில் செய்யப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பேரறிஞர் அண்ணா காலந்தொட்டு தமிழகம் பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கையில் எந்தவித சமரசமும் இல்லை என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி