தமிழ்நாடு முழுவதும் நேற்றிரவு எங்கும் மின்தடையில்லை: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார்

1873பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்த நிலையில், மாநிலம் முழுவதும் நேற்றிரவு முதல் எங்கும் மின்தடை ஏற்படவில்லை என்பதை மின்வாரியம் உறுதி செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்ட தற்காலிகக் குறைபாடே சில இடங்களில் மின் விநியோகப் பாதிப்புக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது தேவையான அளவு கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுச் சீரான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி