தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆக.21) பல்வேறு மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்லடம் வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம் பகுதிகள், பெரம்பலூர் அரணாரை, எலம்பலூர் பகுதிகள், தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுலை பகுதிகள், தேனி பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.