சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.08) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சில பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, "அம்பத்தூர் பகுதியில் TI Cycle 3வது பிரதான சாலை மற்றும் 6 முதல் 9வது தெருக்கள். மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மகாத்மா காந்தி சாலை 4,5,6,11,12வது தெருக்கள், காமராஜ் நகர் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.