சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பிப்.17-க்கு முன் அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே கூட்டணி அறிவிக்கப்படும் என்றும் கூறினார். தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து தேமுதிக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் அவர் வெளிப்படுத்தினார்.