தவெக தலைவர் விஜய் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சர்சைக்குறிய வகையில் விமர்சித்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், “நயினார் நாகேந்திரன் மிகவும் அன்பாக, அமைதியாக பேச கூடியவர். அவர் எதனால் திரிஷாவை ரெபர் செய்தார் என தெரியவில்லை. அது எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கு. சின்ன விஷயத்தை பெண்களுக்கு அவமானம் நடந்துவிட்டது போல ஊதி ஊதி பெரிதாக்கி வருகின்றனர்’’ என்று கூறினார்.