“மக்களை விலைக்கு வாங்க பார்க்கிறார்கள்”.. சீமான் குற்றச்சாட்டு

7735பார்த்தது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மார்ச் 23) முதல் பரப்புரையை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக திருத்தணியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் சாராயம் என்ற திரவப் போதை, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற திடப் போதை புழக்கம் அதிகரித்துள்ளது. வீட்டை விட்டு வெளியே வர முடியுமா? என்ற அளவுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. வாக்கிற்கு காசு கொடுக்கும் இடத்தில் சேவை என்ற சொல் செத்து விடுகிறது” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி