தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்பு ரூ.10,000 கேட்டவர்கள் இப்போது ரூ.20,000 கேட்கிறார்கள். முதல்வர் பெயரைச் சொன்னால் கூடுதலாகக் கேட்கிறார்கள் அல்லது குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.