பதவி ஆசைதான் முக்கியம் என்றால், கூட்டணிக்காக முதலமைச்சர்
விஜய் தன்னிடம் தொலைபேசியில் பேசியபோதே அதைக் கேட்டிருப்பேன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், "‘நீங்களே வாருங்கள், அமைச்சராகுங்கள்; திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுங்கள்’ என்று அழைப்பு விடுத்தார்கள். ஆனால் அந்த இரண்டு வாய்ப்புகளையுமே நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்" எனப் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியுள்ளது
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: சன் நியூஸ்