கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி தாலுகாவை சேர்ந்த ஹல்கூர் பகுதியில் இரணையா (58) என்பவர் பெயிண்ட் கடைக்கு பெயிண்ட் வாங்க சென்றிருக்கிறார். அப்போது அவர் கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.