கட்சி ஆரம்பிக்கும் போதே நாற்காலியும் செய்து விடுகிறார்கள்: அமைச்சர் சாடல்

15பார்த்தது
கட்சி ஆரம்பிக்கும் போதே நாற்காலியும் செய்து விடுகிறார்கள்: அமைச்சர் சாடல்
கட்சி ஆரம்பிக்கும்போதே நாற்காலியை செய்து விடுகிறார்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் மாற்றுக்கட்சியினர் 2500 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (ஜன., 10) நடந்தது. இதில் பேசிய அமைச்சர், 'கட்சி ஆரம்பித்த மறுநாளே நாற்காலி போட்டுக்கொண்டு நாளைய முதல்வரே என்று சமூக வலைதளங்களில் வலம் வருவதை நாம் பார்க்கிறோம். திமுகதான் தமிழகத்தின் தாய் கழகம். தாய் கழகமான திமுகவில் இணைந்தவர்களை அன்போடு வரவேற்கிறேன்' என்றார்.

தொடர்புடைய செய்தி