தவெகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

1535பார்த்தது
தவெகவில் இருந்து விலகிய 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஈரோடு கவுந்தப்பாடி புதூர் பகுதியில் தவெகவைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் தங்களை இன்று (பிப்., 07) இணைத்துக் கொண்டனர். அப்போது அவருடன் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர். தவெக இளைஞர்கள் அதிமுகவில் இணைந்துள்ளதால், தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.