தென்மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி தவெக பொறுப்பாளர் பிரவீன்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தவெகவினர், கடம்பூர் ராஜூ முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர். இது தென்மாவட்டங்களில் களமிறங்க திட்டமிட்டுள்ள விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.