“ஓட்டு மட்டும் கேக்குறாங்க ரோடு போடல”.. கொந்தளித்த பள்ளி மாணவிகள்

3979பார்த்தது
திருச்சி மாவட்டம் அருகே சாலை இல்லாத காரணத்தினால் பேருந்து வசதி இல்லை என கூறி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், “பள்ளிக்கு நடந்து செல்வதால் தாமதம் ஏற்படுகிறது. ஆசிரியர்கள் எங்களை வெளியில் அனுப்பிவிடுகின்றனர். தினமும் அழுதுகொண்டே பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் இளைஞர்கள் வம்பிழுக்கின்றனர். ஒருவர் கூட இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 18 வயது ஆனவுடன் ஓட்டு மட்டும் கேட்டு வருகின்றனர்” என வேதனை தெரிவித்தனர்.   

நன்றி: itamilnews

தொடர்புடைய செய்தி