ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் பெயரைச் சொல்லி அவரது லாட்டரி நிறுவனத்தில்
வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தன்னை தவெக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியண், ஜெயபால் ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இப்புகாரை மறுத்துள்ள எம்எல்ஏ சரவணன், தமக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே சிலர் தூண்டுதலால் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், தவறிழைத்தவர்கள் மீது தவெக ஆட்சியில் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.