கேஸ் ஏஜென்சி வைத்திருப்பவர்கள் குடோனில் பல சிலிண்டர்களை பதுக்கி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது என வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வியாபாரிகளுக்கு ஒரு சிலிண்டர் 7000 ரூபாய், மக்களுக்கு 5000 ரூபாய் விலை சொல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் புகார் அளிக்கவுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் நிச்சயமாக இதற்கு நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது" என அவர் கூறினார்.