சென்னையில் 24 மணி நேரத்தில் 12 குற்றங்கள் நடந்துள்ளதாகவும், போதைப்பொருட்களால்தான் பெண் பிள்ளைகளை வெளியே அனுப்ப முடியாத நிலை உள்ளதாகவும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சாடியுள்ளார். மக்களுக்குப் பாதுகாப்பு தருவது தவெக அரசின் கடமை எனக் குறிப்பிட்ட அவர், குற்றங்களில் ஈடுபடுவோரைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்றும், அவர்கள் உயிரோடு இருக்கவே கூடாது என்றும் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்.