வீட்டுச் சாவியை எடுத்து சாகவாசமாக ரூ.16 லட்சம் திருடிய திருடன்

48பார்த்தது
வீட்டுச் சாவியை எடுத்து சாகவாசமாக ரூ.16 லட்சம் திருடிய திருடன்
கேரளாவின் இடுக்கியில் வீட்டுக்கு வெளியே பூந்தொட்டிக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து, வீட்டிற்குள் நுழைந்து ரூ.16 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் தேவாலய திருவிழாவுக்கு சென்ற நேரத்தில் திருட்டு நடந்துள்ளது. சாவி இருக்குமிடம், வீட்டில் பணம் இருப்பது தெரிந்தே திருட்டு நடந்துள்ளது என்று சந்தேகிக்கின்றனர். வீட்டாருக்கு பழக்கம் உள்ளவர்களே திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி