தமிழகத்தில் தவெகவுடன்
காங்கிரஸ் கைகோர்த்ததால் அதிருப்தியடைந்துள்ள
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின், தேசிய அளவில்
பாஜக மற்றும்
காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக உத்தவ் தாக்கரேவைச் சந்தித்த
திமுக எம்.பி. கனிமொழி, அடுத்ததாக டிம்பிள் யாதவ் மற்றும் சுப்ரியா சுலேவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு
பாஜக, காங்கிரசுக்கு எதிராக புதிய
பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த பிராந்தியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.