தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்-ஐ தேர்தல் ஆணையம் நீக்கியதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அதிகார மீறல் எனவும், தேர்தல் ஆணையம் பாஜக-அதிமுக கூட்டணியின் கருவியாக செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். கேரளா, மேற்கு வங்க சம்பவங்களை குறிப்பிட்டு, ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக விமர்சித்தார். இதைத் தடுக்க திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.