தவெக தலைவர் விஜயை, நயினார் நாகேந்திரன் விமர்சித்தது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செல்வப்பெருந்தகை கூறுகையில், "ஒரு பண்பாளரான நயினார் நாகேந்திரன் எப்படி இதைப் பேசினார் என தெரியவில்லை. அதை தவிர்க்க வேண்டும்" என்றார். மேலும், திருமாவளவன் கூறுகையில், "ஒரு தேசிய கட்சியின் தலைவர் இந்தமாறி ஒரு கருத்தை சொல்லி இருப்பது ஏனென்று விளங்கவில்லை. இது ஏற்புடையதல்ல” என்றார்.