“பாஜகவுடன் நெருக்கமா இருப்பதாக எழுந்த விமர்சனத்தை ஓபிஎஸ் முறியடித்துவிட்டார்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று (பிப்.27) செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மேலும் வலிமை கூடியிருப்பதாக நான் நம்புகிறேன். ஜெயலலிதாவின் நம்பிக்கைப் பெற்றவராக விளங்கிய ஓபிஎஸ், திராவிட கழகத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.