தமிழ்நாட்டின் உட்சபட்ச சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் திருமாவளவன் என்று நாதக செய்தித்தொடர்பாளர் பாக்கியராஜன் விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், இல்லாத திராவிடத்திற்கு மாற்று தமிழ்த்தேசியம் என்பார் அப்படியே யூடர்ன் அடித்து தமிழ்தேசியம் என்று ஒன்று இல்லை என்பார். விஜயகாந்திற்கு அம்பேத்கார் பற்றி என்ன தெரியும் என்று பேசியவர் சில வருடம் கழித்து வாழும் அம்பேத்கராக
விஜயகாந்த் தெரிகிறார் என்றார். இப்படி இன்னும் ஓராயிரம் இருக்கிறது அவரின் சந்தர்ப்பவாத
அரசியல் என சாடியுள்ளார்.