விசிக தலைவர் திருமாவளவன் ‘CM’ என பதித்த காரில் வந்தது தொடர்பான சர்ச்சைக்கு, விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அந்த விலை உயர்ந்த கார் படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடப்படும் கார் என்றும், ‘திருமா 35, சமூக நீதியின் சகாப்தம்’ நிகழ்ச்சிக்காக TN 07 CM 2031 என்ற வாகன எண்ணை வடிவமைத்திருந்ததாகவும் அவர் கூறினார். திருமாவளவன் ‘CM’ என பதித்த காரில் வருவதைக் கூட தாங்க முடியாமல் வழக்கம்போல் சிலர் வன்மத்தை வெளிப்படுத்துவதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.