தவெக தலைமையிலான மசவெ கூட்டணியில் விசிகவின் வன்னி அரசு அமைச்சராக உள்ளார். இந்நிலையில், அமைச்சர் பதவியுடன், கூடுதலாக வாரியத் தலைவர்
பதவி தருவதாக தவெக தெரிவித்த நிலையில், விசிகவில் மோதல் வெடித்துள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு பெயரையும், அமைச்சர் வன்னி அரசு மற்றொரு பெயரையும் பரிந்துரைத்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் சிந்தனை செல்வன் பெயரை கூறியுள்ளார். இதனால் வன்னி அரசு, சிந்தனை செல்வன் இடையே மோதல் வெடித்துள்ளது. மேலும்,
பதவி வேண்டாம் என திருமா கூறியதால் விசிகவினர் அதிருப்தியில் உள்ளனர்.