நெல்லை: மொட்டைக்கு 400 ரூபாயா? கொந்தளித்த பக்தர்

1328பார்த்தது
கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கஜமுத்து என்பவர் இன்று வெளியிட்ட வீடியோவில், பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் மொட்டையடிக்க ரூ. 400 கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளார். தனது குடும்பத்தில் மூன்று பேர் மொட்டை அடித்ததற்கு ரூ. 800 வசூலிக்கப்பட்டதாகவும், விதிப்படி மொட்டைக்கு கட்டணம் வாங்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இது குறித்து அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி