விகே. புரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், 25வது சுற்றிற்கான பனைவிதைகள் நடவுப் பணியை இன்று வடமலைசமுத்திரம் கடனாநதி கால்வாயின் இரு கரைகளில் மேற்கொண்டனர். மொத்தம் 1.5 கி.மீ தூரம் வரை 1457 பனைவிதைகள் நடப்பட்டன. பனைமரம் பாதுகாப்பு சங்க செயற்குழு உறுப்பினர் காசி பாண்டி முன்னிலையில் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதில் பங்கேற்றனர்.