விக்ரமசிங்கபுரம் அருகே பசுக்கிடைவிளையில் வசிக்கும் சொர்ணம்(80) என்ற மூதாட்டியின் சமையலறையில் நள்ளிரவில் புகுந்த இரட்டை கரடிகள், எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. நாய் குரைத்த சத்தம் கேட்டு மக்கள் வெளியே வந்தபோது, ஜோடியாக இரண்டு கரடிகள் உலா வருவதை செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.