விக்கிரமசிங்கபுரம் சங்கரபாண்டியபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் இரண்டு கரடிகள் ஜோடியாக உலா வந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இரவில் அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.