அம்பை வனக்கோட்டம் முண்டந்துறை வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள், இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து இன்று இயற்கை முகாம் நடத்தினர். இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். வகுப்பறை கல்வியைத் தாண்டி, இயற்கை வளம் காத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள், மலைகள், நீர்நிலைகள் போன்ற இயற்கை அமைப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.