நெல்லை மாவட்டம் அம்பை தொகுதியில் வேட்புமனு பரிசீலனை நள்ளிரவு வரை நீடித்தது. சுயேச்சைகள் மீது பலரும் ஆட்சேபனை தெரிவித்ததால் இந்த தாமதம் ஏற்பட்டது. இதனால் வேட்பாளர்கள் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இரவு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இறுதியில், மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 31 மனுக்களில் 25 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 6 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன.