அம்பை; ரயில்வே இடங்களில் அதிகாரி ஆய்வு

1பார்த்தது
அம்பை; ரயில்வே இடங்களில் அதிகாரி ஆய்வு
கல்லிடைக்குறிச்சியில் ரயில்வே துறைக்கு சொந்தமான நிலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலத்தை இன்று தென்காசி ரயில்வே கோட்ட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் ஆய்வு செய்தார். ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது, பாப்பாங்குளம் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே கரடுமுரடான சாலையை சீரமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.