கல்லிடைகுறிச்சி கோட்டைவிளை தெருவைச் சேர்ந்த சந்தான பாரதி (31) என்பவர், பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆத்தியடி விலக்கு அருகே சென்றபோது, மதுபோதையில் ஆட்டோ ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சந்தான பாரதி மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் பேரில், அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று கைது செய்யப்பட்டார்.