நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இன்று (மே 21) ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நகர
காங்கிரஸ் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர
காங்கிரஸ் தலைவர் பொன்ராஜ் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.