விக்ரமசிங்கபுரம் நகராட்சியில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, ஆணையர் மற்றும் நகர்மன்றத் தலைவர் வெளியே வந்தபோது, 1-வது வார்டு பெண் கவுன்சிலர் கிராஸ் இமாக்குலேட், கலங்கிய குடிநீர் விநியோகம் குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து நகர மன்ற கூட்டத்தில் பேச முயன்றபோது, கூட்டம் முடிந்துவிட்டதாக திருப்பி அனுப்பப்பட்டதால், அவர் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.