நெல்லை பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கடந்த 4 நாட்களாக மாவட்ட நிர்வாகம் சிறப்பு கண்காணிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. ஆற்றில் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று வரை ரூ. 26, 000 அபராதம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மூலம் வசூலித்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு பணிகள் தொடரும் என்றும், நதிக்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.