மானூர் காவல்துறையினர் நேற்று (பிப்ரவரி 7) பல்லிகோட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த முத்துராமலிங்கம் (30) மற்றும் தமிழ்ச்செல்வன் (23) ஆகியோரை சோதனை செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை கண்டறிந்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்தனர்.