களக்காட்டில் இயங்கி வரும் வீமா மருத்துவமனை மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்ட புகார் என மருத்துவரின் மனைவி கூறியுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் பெண் ஒருவர் புகார் அளித்ததாகவும், முகாந்திரமின்றி இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனைக்குள் சில தீய சக்திகள் பணம் பறிக்க சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வெற்றிகரமாக இயங்கி வரும் மருத்துவமனைக்கு இது ஒரு சவால் என்றும் அவர் கூறினார்.