முக்கூடல் போலீசார் வடக்கு அரியநாயகிபுரம் ஆற்றங்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் மர்ஜி (28) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றதைக் கண்டனர். அவரை சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, NDPS சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஹேமந்த் மர்ஜியை போலீசார் கைது செய்தனர்.