பாபநாசம் பொதிகையடியை சேர்ந்த வனராஜ்(68) நேற்று மலைப்பகுதியில் உள்ள வனப்பேச்சி அம்மன் கோயில் கொடை விழாவுக்கு சென்றபோது, அங்குள்ள ஆற்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விகே. புரம் போலீசார் சடலத்தை மீட்டனர். விசாரணையில், லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை(47) என்பவர் மதுபோதையில் வனராஜை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசார் வெள்ளத்துரையை இன்று கைது செய்தனர்.