பாபநாசம் அருகே அனவன்குடியிருப்பு கிராமத்தில் இரவில் உணவு தேடி இரண்டு கரடிகள் தனியார் திருமண மண்டபம் அருகில் நடமாடியதை விவசாயிகள் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அனவன்குடியிருப்பு கிராமத்தில் தொடர்ச்சியாக கரடிகளின் நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.